Trending News

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை

(UTV|COLOMBO)-நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் குறிப்பாக மத்திய, ஊவா, சப்ரகமுவ, மேல், தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் 100-150 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று நண்பகல் 12.00 மணிக்கு வௌியிட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையைச் சூழவுள்ள கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக நாட்டில், குறிப்பாக வடமத்திய, மத்திய, சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் காணப்படும் மழையுடனான வானிலை நிலைமை மேலும் அதிகரிக்குமெனவும் அடுத்த சில நாட்களுக்கு தொடருமெனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மத்திய, ஊவா, சப்ரகமுவ, மேல், தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் 100-150 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

நடிகை தீபிகா படுகோன்-ரன்வீர் சிங் திருமண திகதி அறிவிப்பு

Mohamed Dilsad

Galle-Face entry road closed

Mohamed Dilsad

‘Sigiriya’ to be declared No-Polythene Zone

Mohamed Dilsad

Leave a Comment