(UTV|COLOMBO)-நாட்டில் நிலவி வரும் சீற்ற காலநிலை காரணமாக மண்சரிவு, வெள்ளம் போன்ற அனர்த்தங்கள் ஏற்படும் அபாயம் காணப்படுவதாக சில பகுதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அனர்த்தங்களை எதிர்கொள்வதற்கும், மக்களுக்கு உதவுவதற்கும் சுமார் ஆயிரக்கணக்கான இராணுவத்தினர் களமிறக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இதனடிப்படையில் கொழும்பு, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் மொத்தமாக 110 இராணுவத்தினர் சேவையில் ஈடுபட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர், பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.
இதேவேளை தொடர்ந்தும் பெய்து வரும் மழை காரணமாக சில ஆறுகளின் நீர் மட்டம் அதிகரிப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன்படி இன்று அதிகாலை அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஆறுகளின் நீர்மட்ட அறிக்கையில் பெரும்பாலான ஆறுகளின் நீர்மட்டம் சாதாரண அளவிலேயே இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]