(UTV|COLOMBO)-முன்னாள் சட்டமா அதிபர் ஷிப்லி அஸீஸின் மறைவு நாட்டுக்கும் சமூகத்துக்கும் பேரிழப்பாகுமென்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
ஷிப்லி அஸீஸின் மறைவு குறித்து அவர் வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது,
சட்டத்துறையில் பல பரிமாணங்களில் பதவி வகித்த அவர், அரசியலமைப்பு சபையில் முஸ்லிம் சமூகத்தின் சார்பான ஒரேயொரு அங்கத்தவராக பணியாற்றினார்.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராகவும், பதவி வகித்த அன்னார் இலங்கையின் சட்டத்துறையில் ஒரு விற்பன்னராகவும் திகழ்ந்தவர்.
காலியின் சிரேஷ்ட சட்டத்தரணியான எம்.எச். அப்துல் அஸீஸின் புதல்வாரன இவா,; தனது தந்தையார் ஸ்தாபித்த இலங்கை அஹதியா இயக்கத்தின் தலைவராக இருந்து முஸ்லிம் மாணவர்களின் இஸ்லாமிய கல்விக்கும், ஒழுக்க நெறிகளுக்கும் வழிகோலியவர்.
ஒரு கட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் நிறைவேற்றுக் குழுவின் உறுப்பினராகவும் பணியாற்றியிருக்கிறார். முஸ்லிம் திருமாண விவாகரத்துச் சட்டம் தொடர்பான குழுவின் அங்கத்தவராகவும் பணியாற்றிய இவர், அந்தச் சட்டம் தொடர்பில் சமூகத்துக்கு விழிப்புணர்வுகளை உருவாக்கி, பொருத்தமான, பரிந்துரைகளையும் செய்தவர்.
பல்வேறு சமூக நல இயக்கங்களின் முக்கிய அங்கத்தவரான மர்ஹும் சிப்லி அஸீஸ் சமூகத்துக்கான தேவைகளை நிவர்த்தி செய்வதில் முழுமூச்சுடன் பாடுபட்டார். அன்னார் அகில இலங்கை அஹதியா இயக்கத்தின் மூலம் இஸ்லாமிய கருவூலங்களை மாணவச் சமூகத்திற்கு போதிக்க பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தினார்.
சிவில் விமான அதிகாரசபை ஆரம்பிக்கப்பட்டு, 2003 – 2005 காலப்பகுதியில் அதன் முதலாவது தலைவராகவும் பணியாற்றியவர்.
அன்னாரின் மறைவினால் துயருறும் அவரது குடும்பத்திற்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு, அன்னாருக்கு ஜன்னதுல் பிர்தொஸ் சுவனபதீ கிடைக்க இறைவனை பிரார்த்திக்கின்றேன்.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]