Trending News

கோட்டபாயவிற்கு எதிரான வழக்கு தொடர்பில் நீதிமன்றம் இன்று பிறப்பித்த உத்தரவு…

(UTV|COLOMBO)-பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு டிசம்பர் 4 ஆம் திகதி முதல் தொடர்ந்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

கோட்டபாய ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்றைய தினம் நிரந்தர நீதாய மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தங்காலை – வீரகெட்டிய – மெதமுலன டீ.ஏ.ராஜபக்ஷ நினைவு அருங்காட்சிய நிர்மாண பணியின் போது 33 மில்லியன் ரூபா முறைக்கேடாக பயன்படுத்தப்பட்டுள்ளமை உள்ளிட்ட பொது சொத்துக்கள் சட்டத்தின் கீழ் 7 குற்றப்பத்திரங்களை சட்டமா அதிபர் தாக்கல் செய்துள்ளார்.

இது குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த வழக்கு எதிர்வரும் 19 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Pakistani national arrested at BIA with heroin

Mohamed Dilsad

விசிஷ்ட சேவா விபூஷண பதக்கம் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்

Mohamed Dilsad

போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது

Mohamed Dilsad

Leave a Comment