Trending News

தென்கொரியா எரிபொருள் களஞ்சியசாலை வெடிப்பு சம்பவம்-இலங்கையர் கைது

(UTV|COLOMBO)-தென்கொரியாவின் சோல் நகர்- கொயென்க் பிரதேசத்தில் உள்ள எரிபொருள் களஞ்சியசாலை கட்டடத்தில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவம் தொடர்பில், இலங்கையர் ஒருவர் சந்தேகத்தின் பெயரில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த வெடிப்பு சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ள கொரியா பொலிஸ் அதிகாரிகளால் 27 வயதுடைய குறித்த நபர் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த வெடிப்பு சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றதுடன், 250 தாங்கிகளில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த, 3 மில்லியன் லீற்றர் எரிபொருள் விரயமாகியுள்ளதாகத் கொரிய தகவல்கள் தெரிவித்துள்ளன.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட நபர் பல வருடங்களாக கொரியாவில் கட்டுமாணத் ​தொழிலில் ஈடுபட்டு வருபவரெனவும் தெரிவிக்கப்படுகிறது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Maldives frees Sri Lankan accused of plotting to assassinate Yameen

Mohamed Dilsad

“Persistent efforts needed to secure gains we already made” – Finance Minister

Mohamed Dilsad

A village for Journalists in Vavuniya

Mohamed Dilsad

Leave a Comment