Trending News

லங்கா ஐ.ஓ.சி நிறுவன எரிபொருள் விலையும் அதிகரிப்பு

(UTV|COLOMBO)-நேற்று(10) நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்தின் எரிபொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

ஒக்டேய்ன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 155 ரூபாவாகவும், ஒக்டேய்ன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 172 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 141 ரூபாவாகவும், லங்கா ஒட்டோ டீசல் ஒன்றின் விலை 129 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஐ.ஓ.சி தெரிவித்துள்ளது.

இதேவேளை, நேற்று(10) நள்ளிரவு முதல் இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபனத்தின் எரிபொருட்களின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

ஒக்டேய்ன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 6 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, 149 ரூபாவில் இருந்த 92 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 155 ரூபாவாகும்.

ஒக்டேய்ன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 8 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, 161 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டு வந்த 95 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 169 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 8 ரூபாவினால் அதிகரிப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கமைய, சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை முதல் 141 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தற்போது 123 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்ற ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலையில் எந்தவித அதிகரிப்பும் ஏற்படவில்லை என நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

ஜூலியை களமிறக்கும் அனிருத்

Mohamed Dilsad

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சபாநாயகர் விடுத்துள்ள எச்சரிக்கை…

Mohamed Dilsad

Prime Minister offers prayers at Kollur Temple

Mohamed Dilsad

Leave a Comment