(UTV|COLOMBO)-தமக்கு பிணை வழங்குமாறு கோரி பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அதன் நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோர் தாக்கல் செய்த மீள்பரிசீலனை மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மனு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது இந்த தீர்ப்பு வழங்கப்பட்டதாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் கூறினார்.
இந்த மனு மூலம் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன ஆகியோர், மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி சம்பந்தமாக கைது செய்யப்பட்டுள்ள தம்மை பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் பிணையில் விடுவிப்பதற்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்ற நீதவான் மறுப்புத் தெரிவித்ததாக நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
எனினும் விசாரணைகளின் படி இரகசியப் பொலிஸார் நீதிமன்றுக்கு சமர்பித்த அறிக்கையில் பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் எந்த தவறும் இனங்காணப்படவில்லை என்று மனுதாரர்கள் தெரிவித்தனர்.
இதன்காரணமாக கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட பிணை மறுப்புத் தீர்ப்பு சட்டத்துக்கு முரணானது என்று தீர்ப்பளித்து தம்மை பிணையில் விடுவிக்க உத்தரவிடுமாறு அர்ஜுன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன மேன்முறையீட்டு நீதிமன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர்.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]