Trending News

இன்றும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை.

(UTV|COLOMBO)- தென் மாகாணத்திலும் களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களிலும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும், சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் குறிப்பாக பி.ப 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் குறித்த பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

Related posts

නිදහස් දින උත්සවය ගැන රාජ්‍ය ආයතන වෙත දැනුම් දීමක්

Editor O

‘Sancharaka Udawa’ expo from June 7

Mohamed Dilsad

மழையுடன் கூடிய காலநிலை

Mohamed Dilsad

Leave a Comment