(UDHAYAM, COLOMBO) – சீனா, இலங்கை மீது கொண்டுள்ள நட்புக்கும் அக்கறைக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நன்றி தெரிவித்துள்ளார்.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச திணைக்கள அமைச்சர் சென்தாவோவுடக்கும் பிரதமர் ரணில்விக்கிரம சிங்கவுக்குமிடையிலான சந்திப்பு நேற்று காலை அலரி மாளிகையில் இடம்பெற்றது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அரசியலில் பல மாற்றங்கள் ஏற்பட்டாலும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையான உறவு முன்னெடுக்கப்பட்டுவற்துள்தை சுட்டிக்காட்டிய பிரதமர் ரணில்விக்கிரம சிங்க மேலும் தெரிவித்ததாவது:
இரு தரப்பாரிடையேயும் உள்ள நட்பின் அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு எழுச்சி பெறும் ஆசியாவை உருவாக்குவது தொடர்பாக புதிதாக ஆராய வேண்டிய காலம் ஏற்பட்டுள்ளது
இலங்கை எப்போதும் நடுநிலைக் கொள்கையையே பின்பற்நிவருகிறது ஏனையோருக்கு அச்சுறுத்தலாகவோ இடையூறாகவோ இல்லாது அனைத்து சர்வதேச நாடுகளுடனும் நட்புறவை பேணுவதே இலங்கையின் தற்போதைய கொள்கை.
சீன ஜனாதிபதி ஆரம்பித்துள்ள திட்டத்தோடு இலங்கை மகிழ்ச்சியுடன் பங்குகொள்வது இலங்கை முன்னெடுத்துள்ள கொள்கையின் அடிப்படையிலேயேயாகும்.ஹம்பாந்தோட்டை கைத்தொழில் நகரம் மற்றும் கொழும்பு நிதி நகரம் என்பவற்றை அமைப்பது தொடர்பாக சீனாவின் பங்களிப்பு குறித்து சுட்டிக்காட்டிய பிரதமர் ரணில்விக்கிரம சிங்க சீன மக்கள் குடியரசுக்கு தனது நன்றியையும் பிரதமர் தெரிவித்தார்.
இதன்போது சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடர்புகளை ஏற்படுத்திய இலங்கையின் முதலாவது அரசியல் கட்சி ஐக்கிய தேசியக் கட்சி என சீன கம்யூனிஷ்ட் கட்சியின் சர்வதேச திணைக்கள அமைச்சர் சோங் தாஓ சுட்டிக்காட்டியதுடன், மக்கள் சீன குடியரசு அமைக்கப்பட்ட பின்னர், ஐ. தே. க. அரசாங்கம் சீனாவுடன் வர்த்தக நடவடிக்கைகளை ஏற்படுத்திக் கொண்டதாகவும் தெரிவித்தார்.
சீன கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் ஐக்கிய தேசிய கட்சிக்கும் இடையேயுள்ள நீண்ட கால தொடர்பை அடிப்படையாகக் கொண்டு இலங்கை இந்து சமுத்திரத்தின் மத்திய நிலையமாக உருவாக மேற்கொள்ளும் முயற்சிக்கு சீன கம்யூனிஸ் கட்சியினதும் மக்கள் சீன குடியரசினதும் பூரண ஒத்துழைப்பை வழங்கும் அவர் கூறினார்.