Trending News

மீண்டும் டெங்கு நோய் பரவும் ஆபத்து

(UTV|COLOMBO)-நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக டெங்கு நோய் பரவும் ஆபத்து மீண்டும் தலைதூக்கியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி வாழும் சுற்றுச் சூழலை தூய்மையாக வைத்திருக்க வேண்டியதன் அவசியத்தை இந்த பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

இதுவரை நாட்டில் 39 ஆயிரத்து 799 பேர் டெங்கு நோய்க்கு உள்ளாகியுள்ளனர்.

பெரும்பாலானவர்கள் கொழும்பு மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளனர்.

மழையுடன் கூடிய காலநிலை காரணமாக எதிர்வரும் 2 மாதங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாமென தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதனால், இந்த நோய்க்கான அறிகுறி தென்பட்டால் உடனடியாக மருத்துவ பரிசோதனையை செய்து கொள்ளுமாறு சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

கோத்தாபய ராஜபக்ஷவின் வாகனம் விபத்து

Mohamed Dilsad

Parliament urged to take immediate measures recommended in Bond Report

Mohamed Dilsad

Britain’s EU envoy abruptly resigns

Mohamed Dilsad

Leave a Comment