Trending News

திருட்டு மாணவன் கைது

(UDHAYAM, COLOMBO) – மாணவர் ஒருவர் போன்று பல்கலைக்கழக விடுதிகளில் நுழைந்து அங்கு காணப்பட்ட மாணவர்களின் மடிக்கணணிகளை திருடிய மற்றும் பல்வேறு குற்றங்கள் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள நபரொருவர் மிரிஹான விசேட குற்றவியல் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரால் சுமார் 50க்கும் மேற்பட்ட மடிக்கணணிகள் திருடப்பட்டுள்ள நிலையில் , அதன் பெறுமதி ரூ. 50 இலட்சத்திற்கும் அதிகமாகும்.

நாடு பூராகவும் உள்ள 7 பல்கலைக்கழகங்களில் இவ்வாறு மடிக்கணணிகளை திருடியுள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்ததாக காவற்துறை தெரிவித்தது.

குறித்த நபர் மிரிஹான பிரதேசத்தை சேர்ந்தவராவார்.

அவர் மஹரகம பிரதேசத்தில் தங்கியிருந்த நிலையிலேயே நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நபர் மஹர சிறைச்சாலையில் இருந்து தப்பி வந்த குற்றவாளியாவார்.

மேலும் , இவருக்கு எதிராக நாட்டின் பலபாகங்களின காவல் நிலையங்களிலும் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

தற்போதைய நிலையில் , சந்தேகநபரிடம் இருந்து திருடப்பட்ட மடிக்கணணிகள் காவற்துறையால் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில் , மடிக்கணணிகளை இழந்த மாணவர்கள் அதன் அடையாளத்தை உறுதி செய்து மடிக்கணணிகளை பெற்றுக்கொள்ளுமாறு காவற்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

மட்டக்களப்பில் தீவிரமாக பரவி வரும் டெங்கு

Mohamed Dilsad

2nd Phase of O/L paper marking begins

Mohamed Dilsad

People’s Bank, BOC, BoI Director Boards dissolved

Mohamed Dilsad

Leave a Comment