Trending News

இராணவத்தினர் தொடர்பில் தாம் கூறிய கருத்து பிழையாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது – சந்திரிக்கா

(UDHAYAM, COLOMBO) – யுத்தப் பாதிப்புக்கு உள்ளான பெண்கள் இராணுவத்தால் பாலியல் தொல்லைகளுக்கு உள்ளாக்கப்படுவதாக தாம் கூறி இருந்த கருத்து தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க விளக்கமளித்துள்ளார்.

வெளிநாட்டு செய்தியாளர்களிடம் அவர் கடந்த வாரம் இந்த கருத்தை வெளியிட்டிருந்தார்.

இந்த கருத்து தொடர்பில் பல்வேறு தரப்பினரால் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தாம் கூறிய கருத்து பிழையாக புரிந்து கொள்ளப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாம் முழுமையாக அனைத்து இராணுவம் மீதும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

Android users advised to update Twitter immediately: ITSSL

Mohamed Dilsad

‘I was out of the loop with intelligence warnings’

Mohamed Dilsad

Market conditions in Sri Lanka normalizing – IMF’s Camilla Anderson

Mohamed Dilsad

Leave a Comment