Trending News

நாலக டி சில்வா நாளை குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு

(UTV|COLOMBO)-பயங்கரவாத தடுப்பு பிரிவின் முன்னாள் காவற்துறை மா அதிபர் நாலக டி சில்வா நாளை, குற்றத் தடுப்பு விசாரணைத் திணைக்களத்தில் முன்னிலையாகவுள்ளார்.

அவரை குற்றத் தடுப்பு விசாரணை திணைக்களத்தில் நேற்று முன்னிலையாகுமாறு முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தமது குழந்தையின் திடீர் சுகவீனம் காரணமாக அங்கு முன்னிலையாக முடியாது என அவர் தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில், நாளைய தினம் முன்னிலையாகுமாறு காவற்துறையினரின் ஊடாக நாலக டி சில்வாவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக, அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர், கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிரான கொலை முயற்சி சதி திட்டம் குறித்த வாக்குமூலம் ஒன்றை வழங்கவே அவர் அங்கு முன்னிலையாகவுள்ளார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

Canada deeply concerned by violence in Sri Lanka

Mohamed Dilsad

Eighteen-hour water cut tomorrow in Colombo

Mohamed Dilsad

Weather today

Mohamed Dilsad

Leave a Comment