Trending News

(VIDEO)-கர்ப்பிணியாக இருக்கும் இளவரசி மெர்க்கலுக்கு கிடைத்த முதல் பரிசு என்ன தெரியுமா?

(UTV|UK)-அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரித்தானிய இளவரசர் ஹரி – மெர்க்கல் தம்பதியினருக்கு முதல் குழந்தை பரிசாக கங்காரு பொம்மையை அவுஸ்திரேலிய கவர்னர் Peter Cosgrove மற்றும் அவரது மனைவி வழங்கியுள்ளனர்.

இளவரசி மெர்க்கலுக்கு 2019 ஆம் ஆண்டு வசந்தகாலத்தில் குழந்தை பிறக்கும் என்று அரண்மனை அறிவித்துள்ள நிலையில், தற்போது அவுஸ்திரேலியாவில் ஹரி தம்பதியினர் சுற்றுப்பயணத்தில் உள்ளனர்.

அங்கு, அவுஸ்திரேலிய கவர்னர் மற்றும் அவரது மனைவியை சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது கர்ப்பமாக இருக்கும் மெர்க்கலுக்கு, கங்காரு பொம்மை ஒன்றை கவர்னர் பரிசாக அளித்துள்ளார்.

இந்த பொம்மையை வாங்கிகொண்ட மெர்க்கல், இது எங்களது முதல் குழந்தை பரிசு என கூறி சந்தோஷம் கொண்டார். மேலும், எங்களுக்கு நல்ல முறையில் வரவேற்பு அளித்த அவுஸ்திரேலியாவுக்கு ஹரி நன்றி தெரிவித்தார்.

அவுஸ்திரேலியாவை தொடர்ந்து நியூசிலாந்துக்கு செல்லவிருக்கின்றனர்.

 

 

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

எதிர்ப்பு பேரணியில் பங்குகொண்ட 4 பல்கலைக்கழக மாணவர்கள் கைது

Mohamed Dilsad

வரவுசெலவுத்திட்ட குழுநிலை விவாதத்தின் 19ஆவது நாள் இன்று

Mohamed Dilsad

Muslim World League makes USD 5 million donation for Easter victims

Mohamed Dilsad

Leave a Comment