(UDHAYAM, COLOMBO) – இலங்கையில் தமிழ் அரசியல் தலைவர்கள் பொறுமை இழந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் ஊடகம் ஒன்று இதனைச் சுட்டிக்காட்டியுள்ளது.
புதிய அரசாங்கம் உருவாக்கப்படுவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட சிறுபான்மை தமிழ் அரசியல் கட்சிகள் முக்கிய பங்கினை வகித்திருந்தன.
அரசாங்கத்தின் மீது பல்வேறு எதிர்ப்பு ஏற்பட்டிருந்தது.
ஆனால் அரசாங்கம் பதவி ஏற்று இரண்டு வருடங்கள் கடந்துள்ள போதும், தமிழ் மக்கள் தொடர்பில் குறிப்பிடத்தக்க பணிகள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை என்று குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.
காணிவிடுவிப்பு, இராணுவக் குறைப்பு, பயங்கரவாத தடை சட்டம் நீக்கப்படுதல், புதிய அரசியல் யாப்பு, நிவாரணம் வழங்கல், போர்க்குற்ற விசாரணை, அரசியல் கைதிகளின் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விடயங்களுக்கு உரிய தீர்வு கிடைக்கப்பெறவில்லை.
இந்த நிலையில் தமிழ் அரசியல் தலைவர்கள் அரசாங்கம் குறித்த அதிருப்தியில் இருப்பதாக அந்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.