(UTV|COLOMBO)-எரிபொருள் விலையேற்றம் குறைப்பு என்பவற்றுக்காக நல்லாட்சி அரசாங்கத்தினால் அறிமுகம் செய்திருந்த சர்ச்சைக்குரிய விலைச்சூத்திரம் நிதி அமைச்சினால் மக்களுக்கு பகிரங்கப்படுத்தப்பட்டது.
அரசாங்க தரப்பிலுள்ளவர்கள் உட்பட யாரும் அறியாத நிலையில் இரகசியமாக வைக்கப்பட்டிருந்த கூட்டு எதிரணி உட்பட பாராளுமன்றத்திலுள்ள எதிர்க் கட்சியினரால் கூட குற்றம்சாட்டப்பட்டு வந்த எரிபொருள் விலைச் சூத்திரத்தையே நேற்று(18) நிதி மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர நாட்டு மக்களுக்கு அறிமுகம் செய்தார்.
எரிபொருள் விலைச்சூத்திரம் தொடர்பாக தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று நிதி அமைச்சில் நடைபெற்றது. இதில் கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சர் இதனைக் கூறினார். இதில் விலைச்சூத்திரத்தை காண்பித்ததுடன், அது பற்றிய விளக்கங் களையும் அவர் வழங்கினார்.
நான்கு முக்கிய காரணங்களை அடிப்படையாகக் கொண்டே உச்ச சில்லறை விலை தீர்மானிக்கப்படுகிறது. எவருக்கும் மாதாந்தம் 10ஆம் திகதி மாற்றப்பட்டுள்ள விலைச்சூத்திரத்தைத் தெரிந்துகொள்ள முடியும்.
விலைச்சூத்திரத்துக்கு இணங்க உச்ச சில்லறைவிலை MRP = V1+V2+V3+V4 சமன்பாட்டின் கீழ் நடைமுறைப் படுத்தப்படுகிறது. கடந்த மே மாதம் 11ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் வாகனங்களுக்கான எரிபொருள் விலைகளுக்கு இணங்க விலைச்சூத்திரம் தொடர்பாக அமைச்சரவை அனுமதி கிடைத்தது.
அதற்கிணங்க விலைச்சூத்திரத்தை அறிமுகப்படுத்துவதற்காக தொழில்நுட்ப குழுவொன்றை நியமித்தோம். இந்தக் குழுவே இச்சூத்திரத்தை அறிமுகப்படுத்தியது எனவும் அமைச்சர் மங்கள சமரவீர தெளிவுபடுத்தினார்.
இந்த சூத்திரம் தொடர்பிலுள்ள பிரச்சினைகளும் சிக்கல் தன்மைகளும் எதிர்வரும் நாட்களில் அரசாங்க எதிரணியின் பேசுபொருளாக மாறிவிடும் என எதிர்பார்ப்பது நடைமுறை பற்றி தெரிந்தவர்களுக்கு புதிய விடயமல்ல.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]