Trending News

பல இலட்சம் பெறுமதியான மாணிக்க கற்களுடன் ஒருவர் கைது

(UTV|COLOMBO)-சட்டவிரோதமான முறையில் ஆப்பிரிக்காவின் ருவாண்டாவில் இருந்து மாணிக்க கற்களை எடுத்து வந்த இலங்கையர் ஒருவரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

பேருவலை பகுதியை சேர்ந்த 25 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் நேற்று (24) காலை 10 மணியளவில் ருவாண்டாவில் இருந்து டோஹா ஊடாக கடார் விமான சேவைக்கு சொந்தமான QR 407 என்ற விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்துள்ளார்.

இந்நிலையில் பயணிகள் வருகை தரும் ஒழுங்கின் ஊடாக குறித்த நபர் வருகை தரும்போதே அவருடைய உடடலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குறித்த மாணிக்க கற்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

4 இலட்சம் ரூபா பெறுமதியான 329 கெரட் நிறையுடைய “பகுதி விலையுயர்ந்த கற்கள்” (Semi Precious Jem Stones) மாணிக்ககற்களே குறித்த நபரிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

Two-year-old saves twin brother from falling furniture [VIDEO]

Mohamed Dilsad

IUSF and IUBF Convenors granted bail

Mohamed Dilsad

Earthquake jolts New Zealand; Civil Defence says no tsunami threat

Mohamed Dilsad

Leave a Comment