Trending News

நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு

(UTV|COLOMBO)-நாட்டின் பல பாகங்களிலும் பெய்து வரும் கடும் மழையைத் தொடர்ந்து பல நீர்த்தேக்கங்களினதும் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தெதுறு ஓயா நீர்த்தேக்கத்தின் நான்கு வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. தெதுறு ஓயா நதியின் கீழ்ப்புற கரைகளில் வாழும் மக்கள் அவதானமாக இருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, பராக்கிரம சமுத்திர நீர்த்தேக்கத்தின்6 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

இராஜாங்கனை நீர்த்தேக்கம், அங்கமுவ நீர்த்தேக்கம், பொல்கொல்லை அணைக்கட்டு ஆகியவற்றின் இரண்டு வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதுடன், குக்குலே-கங்கை நீர்த்தேக்கத்தின் வான் கதவு ஒன்றும் திறக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

Three arrested with 25,000kg of refuse tea ready for export

Mohamed Dilsad

Archbishop refuses to meet Presidential candidates

Mohamed Dilsad

நாவலப்பிட்டியில் ரயில் தடம்புரண்டது மலையக ரயில் சேவை உலப்பனை வரை மட்டுபடுத்தப்பட்டுள்ளது

Mohamed Dilsad

Leave a Comment