(UTV|COLOMBO)-மலையக மக்களின் சம்பளப்பிரச்சினை பற்றி எந்த சுயநலமும் இன்றி தொடராக கவனம் செலுத்தி வருகின்றது யூ.டிவியின் செய்திப்பிரிவும்,நிகழ்ச்சிப்பிரிவூம். இந்த நிலையில் நேற்று இடம் பெற்ற ஆர்ப்பாட்டத்திற்காக செய்தி சேகரிக்க சென்ற எமது குழுவினரை ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட இனந் தெரியாத ஒரு குழுவினர் மிரட்டியூள்ளதோடு எமது குழுவின் ஊடகப்பணிக்கும் இடையூறு ஏற்படுத்தியூள்ளனர்.
ஆர்பாட்டக்காரர்களை அந்த இடத்தில் குழுக்களாக பிரித்தது ஊடகங்கள் தான் என்றும் நீங்கள் உங்கள் நிறுவனத்தின் சுயநலத்துகாக செயற்படுகின்றீர்கள் என்று தகாத வார்த்தைகளால் எமது தொகுப்பாளர் பிஸ்ரின் மொஹமட், தயாரிப்பாளர் அஜித்குமார் ஒளிப்பதிவாளர்களான ராஜ்மோகன்,ஷிவா ஆகியோரை அச்சுருத்தியூள்ளதோடு அவர்களின் பணிக்கு இடையூறுகளை ஏற்படுத்தினர்.
இந்தக்குழுவினர் ஆர்பாட்டத்தை வேறு கோணத்துக்கு கொண்டு செல்வதற்கு முயற்சித்ததையூம் எமது கெமராக்களில் பதிவாகின. எமது குழுவின் பணிக்கு இடையூறு ஏற்படுத்தியது மாத்திரமல்லாது நாங்கள் சொல்கின்ற இடத்தில் மட்டுமே நீங்கள் வந்து செய்தி சேகரிக்க வேண்டும் என்றும் மிரட்டியூள்ளனர். சமூக பொறுப்புடன் செயற்படும் யூ.டிவியின் மீது இப்படியான ஊடக அடக்கு முறைகளை செய்யூம் இந்த நபர்கள் குறித்து கவலை தெரிவிக்கின்றோம்.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]