Trending News

50 ஆயிரம் தண்டப் பணத்திலிருந்து தவிர்ந்து கொள்ளுங்கள்

(UTV|COLOMBO)-மோட்டார் வாகனங்களை ஓட்டுபவர்கள் அந்த வாகனம் தொடர்பான சகல பதிவுகளுடனும் வாகன புகைப் பரிசோதனை செய்தமைக்கான பற்றுச் சீட்டையும் வைத்திருக்க வேண்டும் எனவும், அவ்வாறு வைத்திருக்காதவர்களிடம் தண்டப் பணம் அறவிடப்படும் எனவும் குருவிட்ட பொலிஸ் மோட்டார் போக்குவரத்து பிரிவின் நிலையப் பொறுப்பதிகாரி எம்.ஏ.சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

குருவிட்ட நகரிலுள்ள வாடகை முச்சக்கர வண்டி, லொறி மற்றும் வேன் என்பவற்றின் சாரதிகளுக்கு நடாத்தப்பட்ட விசேட செயலமர்விலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.

அத்துடன், முச்சக்கர வண்டி உட்பட ஏனைய வாகனங்களில் அதிக சப்தத்துடன் பாடல்களை ஒலிபரப்பிக் கொண்டு செல்வதும் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் அவ்வாறு செய்வது தண்டனைக்குரிய குற்றம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரதான பாதையில் போக்குவரத்துக்கு தடங்கள் ஏற்படும் விதத்தில் வாகனத்தை நிறுத்தி வைப்பது 2000 ரூபா தண்டப் பணம் அறவிடுவதற்குரிய குற்றம் எனவும், பஸ் தரிப்பு நிலையம் ஒன்றிலிருந்து இரு புறங்களிலும் 30 மீட்டர் தூரத்துக்கு வாகனங்களை நிறுத்தி வைப்பது 50 ஆயிரம் ரூபா தண்டப் பணம் அறவிடுவதற்குரிய குற்றமாகும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

நீராடச் சென்ற மாணவன் சடலமாக மீட்பு

Mohamed Dilsad

தனியார் துறை ஊழியர்களின் சம்பள அதிகரிப்பிற்கு அரசு நடவடிக்கை

Mohamed Dilsad

விசேட போக்குவரத்து சேவைகள் எதிர்வரும் 26ஆம் திகதி வரை

Mohamed Dilsad

Leave a Comment