Trending News

தட்டுப்பாடின்றி எரிபொருள் விநியோகம்…

(UTV|COLOMBO)-எவ்வித தட்டுப்பாடுமின்றி அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் எரிபொருள் விநியோகிக்கப்பட்டுக் கொண்டிருப்பதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத் தாபனத்தின் தேசிய ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலதிக பௌவுஸர்களும் பயன்படுத்தப்பட்டு நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகம் இடம்பெற்று வருவதாக தேசிய ஊழியர் சங்கத்தின் தலைவர் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார்.

அதேநேரம், மேலதிக கொள்வனவைத் தவிர்த்து வழமைபோன்று எரிபொருளைக் கொள்வனவு செய்யுமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்

நேற்று முன்தினம் பிற்பகல் பெற்றோலியக் கூட்டுத்தாபன தலைமையகத்தில் இடம்பெற்ற அமைதியின்மையில் தமது அங்கத்தவர் ஒருவர் உயிரிழந்தமையைத் தொடர்ந்து, அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பெற்றோலியத்துறைத் தொழிற்சங்கங்கள் பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்திருந்தன.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

Thai Prime Minister will visit Sri Lanka on 12 and 13 July

Mohamed Dilsad

11 Districts Affected by Drought

Mohamed Dilsad

மனதை நெகிழவைக்கும் சம்பவம் -சிசுவுக்கு பாலூட்ட முன்வந்த 9 தாய்மார்

Mohamed Dilsad

Leave a Comment