Trending News

கட்சித் தலைவர்கள் கூட்டம் ஆரம்பம்….

(UTV|COLOMBO)-நாட்டில் நிலவும் அரசியல் நிலவரம் குறித்து கட்சித் தலைவர்களின் விசேட கலந்துரையாடல் ஒன்று சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் தற்சமயம் இடம்பெறுகிறது.

இன்று முற்பகல் 11.20 அளவில் நாடாளுமன்ற கட்டிடத்தொகுதியில் இந்த கலந்துரையாடல் ஆரம்பமானதாக, சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்த கலந்துரையாடலில் நேற்றைய தினம் அமைச்சு பதவிகளை ஏற்ற விஜேதாஷ ராபக்ஷ, டக்ளஸ் தேவாநந்தா, மகிந்த சமரசிங்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன ஆகியோர் கலந்துக் கொண்டுள்ளனர்.

அத்துடன், ஜேவிபி சார்பில் அதன் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான கயந்த கருணாதிலக்க, ரவீ கருணாநாயக்க, லக்ஷமன் கிரியல்ல ஆகியோர் கலந்துக் கொண்டுள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், ரிஷாத் பதியுதின் மற்றும் ரவூப் ஹக்கீம் ஆகியோரும் இதில் கலந்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

புதிய பொருளாதார நிகழ்ச்சித்திட்டம் அடுத்த வாரம்

Mohamed Dilsad

செயற்கையாக மழை பெய்ய வைக்க திட்டம்

Mohamed Dilsad

A/L result sheets available from today

Mohamed Dilsad

Leave a Comment