Trending News

ரணிலை பதவிநீக்குவதற்கு இதுவே முக்கிய காரணம்-ஜனாதிபதி

(UTV|COLOMBO)-ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து நீக்குவதற்கு, இந்நாட்டின் 70 முதல் 75 வீதமான மக்களுக்குத் தேவையாக இருந்தாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இராஜதந்திர அதிகாரிகளை சந்தித்து கூறியுள்ளதாக ‘த ஹிந்து’ செய்தி வெளியிட்டுள்ளது.

அதனை பொதுமக்களின் புன்னகையிலிருந்து புரிந்துகொள்ளுமாறும் வெளிநாட்டு இராதந்திர அதிகாரிகளிடம் ஜனாதிபதி கோரியுள்ளார்.

தமது அமைச்சரவையை சாதாரண நிலைமைக்குக் கொண்டுவரல் மற்றும் வரவுசெலவுத் திட்டத்தைத் தயாரிப்பதற்கு கால அவகாசம் தேவை என்பதனாலே எதிர்வரும் 16ஆம் திகதி வரை பாராளுமன்றம் ஒத்துவைக்கப்பட்டதாகவும் ஜனாதிபதி கூறியதாக ‘த ஹிந்து’ செய்தி வெளியிட்டுள்ளது.

பாராளுமன்றத்தை விரைவில் கூட்டுமாறு மேலைத்தேய இராஜாந்திர அதிகாரிகள் இதன்போது ஜனாதிபதியிடம் கோரியுள்ளதாகவும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டின் பாதுகாப்பிற்கு தான் முழுமையாக பொறுப்புப் கூறுவதாகவும் எவ்வித வன்முறை சம்பங்களும் இடம்பெற இடமளிப்பதில்லை எனவும் ஜனாதிபதி இங்கு குறிப்பிட்டுள்ளாகவும் ‘த ஹிந்து’ வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

கொழும்பின் சில பிரதேசங்களுக்கு 7 மணிநேர நீர்வெட்டு

Mohamed Dilsad

උසස් පෙළ ප්‍රතිඵල 30 වනදාට පෙර…

Mohamed Dilsad

Whats App மீதான தடை இன்று நள்ளிரவு முதல் நீக்கம்

Mohamed Dilsad

Leave a Comment