Trending News

ரணில் விக்கிரமசிங்க நீக்கப்பட்டமைக்கு மாணவர்கள் எதிர்ப்பு

(UTV|INDIA)-இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலமையையடுத்து புதுடில்லியில் உள்ள தெற்காசிய பல்கலைக்கழகத்தின் இலங்கை மாணவர்கள் சிலர் அமைதிப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நியமனம் செய்யப்பட்டமை ஜனநாயக விரோத செயல் என்று தெரிவித்து பேராட்டம் நடாத்தப்பட்டதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜனநாயகத்துக்கு மதிப்பளித்து ஜனாதிபதி பாராளுமன்றத்தைக் கூட்ட வேண்டும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக ஜனாதிபதிக்கு எழுதப்பட்ட கடிதம் ஒன்று புதுடில்லியில் உள்ள இலங்கை தூதரகத்தின் பிரதித் தூதுவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சுமார் அயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் கையொப்பமிட்டு இந்தக் கடிதத்தை ஒப்படைத்துள்ளதாக இந்திய ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

Two earthquakes hit Indonesian province of Aceh

Mohamed Dilsad

ஜனாதிபதி பிரதமருக்கும் இடையில் இன்று விசேட சந்திப்பு

Mohamed Dilsad

Presidential Secretariat and surroundings under the police protection

Mohamed Dilsad

Leave a Comment