Trending News

ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தரப் பிரதிநிதியை சந்தித்த ஜனாதிபதி

(UTV|COLOMBO)-ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதி (Hanaa Singer) அம்மையார் இன்று (31) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தார்.

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நிலைமை தொடர்பில் இதன்போது ஜனாதிபதி ஐ.நா பிரதிநிதிக்கு தெளிவுபடுத்தியதுடன், அரசாங்கத்தின் சகல நடவடிக்கைகளும் அரசியலமைப்பின் பிரகாரமே மேற்கொள்ளப்பட்டுள்ளன எனவும் தெளிவு படுத்தியதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நாட்டில் சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாத்து ஜனநாயக கட்டமைப்பிற்குள் செயற்பட்டு வருவதாகவும் குறிப்பிட்ட ஜனாதிபதி, ஐக்கிய நாடுகள் சபை தொடர்ச்சியாக இலங்கைக்கு வழங்கிவரும் ஒத்துழைப்புகளை பாராட்டினார்.

இதன்போது கருத்து தெரிவித்த (Hanaa Singer) அம்மையார் ஐக்கிய நாடுகள் சபை தொடர்ந்தும் இலங்கைக்கு தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்க தயாராக உள்ளதெனத் தெரிவித்தார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

Arrest in Kuwait frozen maid case

Mohamed Dilsad

பேருந்து மற்றும் வேன் மோதிய விபத்தில் 25 பேர் வைத்தியசாலையில்

Mohamed Dilsad

மல்வானை வீடு மற்றும் காணி தொடர்பான தீர்ப்பு இன்று

Mohamed Dilsad

Leave a Comment