Trending News

அலரி மாளிகைக்குள் ஆயுத களஞ்சியங்கள்-அதன் பாதுகாப்பு ஆபத்தில்?

(UTV|COLOMBO)-இலங்கையின் பாரம்பரிய சொத்தான அலரி மாளிகை தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக பிரபல கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

அலரி மாளிகையில் புராதன பெறுமதியான பொது சொத்துக்கள் ஆபத்தில் உள்ளதாகவும், அது தொடர்பில் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பிரதமர் பாதுகாப்பு பிரதானியினால் பொலிஸ் மா அதிபரிடம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது அலரி மாளிகைக்கு பல்வேறு நபர்கள் சென்று வருவதாக பாதுகாப்பு பிரிவு பிரதானி குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக புராதன பொருட்களின் பாதுகாப்பு தொடர்பில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

அலரி மாளிகைக்குள் பாதுகாவலர்கள் பயன்படுத்தும் ஆயுத களஞ்சிய அறைகள் இரண்டு உள்ளதாகவும், அதன் பாதுகாப்பு ஆபத்திற்குள்ளாகியுள்ளதாகவும் அவர் பொலிஸ் மா அதிபரிடம் அறிவித்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

‘Rata Wenuwen Ekata Sitimu’ in Jaffna today

Mohamed Dilsad

பிளவுபடாத பிரிக்கமுடியாத ஒருமித்த நாட்டிற்குள்ளேயே தீர்வினை எதிரிபார்க்கிறோம்

Mohamed Dilsad

நெல்லை பதுக்கி வைத்துள்ளவர்கள் மீது சட்டநடவடிக்கை – ஹரிசன்

Mohamed Dilsad

Leave a Comment