Trending News

உணவுப் பக்கற்றின் விலையை குறைக்க தீர்மானம்

(UTV|COLOMBO)-அத்தியவசிய உணவுப் பொருட்களின் விலை குறைவடைந்தமைக்கு அமைய, உணவுப் பக்கற்றின் விலையை 10 ரூபாவால் குறைப்பதற்கு அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்களின் சங்கம் தீர்மானித்துள்ளது.

இது குறித்து அனைத்து உணவகங்களுக்கும் அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக சங்கத்தின் ஏற்பாட்டாளர் அசேல சம்பத் கூறியுள்ளார்.

அத்தியவசிய பொருட்களின் விலைகள் குறைவடைந்ததன் நன்மையை மக்களுக்கு பெற்றுக் கொடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், ஒரு கிலோகிராம் பருப்பின் மீதான விசேட வர்த்தக வரி 5 ரூபாவினாலும் ஒரு கிலோகிராம் கடலை மீதான வரி 5 ரூபாவாலும் ஒரு கிலோகிராம் உழுந்தின் மீதான வரி 25 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளது.

கோதுமை மா மீதான தீர்வை வரி சலுகை 6 ரூபாவில் இருந்து 9 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்படுகின்ற சீனி மீதான வரியும் 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

அமெரிக்க ஜனாதிபதி இந்தியா, ரஷ்யா மற்றும் சீனா குற்றச்சாட்டு

Mohamed Dilsad

Trains along Main Line delayed

Mohamed Dilsad

இன்றைய வானிலை…

Mohamed Dilsad

Leave a Comment