அவுஸ்திரேலியா, பிஜி, டானோ மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு 16 நாட்கள் இளவரசர் ஹரியுடன் சேர்ந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த மெர்க்கல் அணிந்திருந்த உடைகளின் மதிப்பு 130,000 பவுண்ட் என்பது தெரியவந்துள்ளது.
பிரித்தானியா இளவரசர் ஹரி மற்றும் மெர்க்கல் அரசகுடும்ப சுற்றுப்பயணமாக அவுஸ்திரேலியா, பிஜி, டானோ மற்றும் நியூசிலாந்து போன்ற நாடுகளுக்கு 16 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தனர்.
இவர்கள் அவுஸ்திரேலியாவின் சிட்னியில் தங்களுடைய பயணத்தை தொடங்கிய போது, மெர்க்கல் கர்ப்பமாக இருக்கிறார் என்று கெங்ஸ்டன் அரண்மனை அறிவித்தது.
இந்நிலையில் இந்த 16 நாட்கள் சுற்றுப்பயணத்தின் போது இளவரசி மெர்க்கல் 30-க்கும் மேற்பட்ட ஆடைகளை மாற்றியுள்ளார்.
அதில் மெர்க்கலின் ஆடை மற்றும் அவர் அணிந்திருந்த அணிகலன்களின் மதிப்பு 130,107.50 பவுண்ட் என பிரபல ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
அதில், அவுஸ்திரேலியாவின் சிட்னி மாநகரில் நடந்த Geographical Society விருது வழங்கும் விழாவில், கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தால் ஆன Oscar de la Renta என்ற உடையை அணிந்திருந்தார்.
அதன் மதிப்பு 10,000 பவுண்ட் எனவும் பிஜிக்கு சென்ற போது அங்கு டின்னர் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சிக்கு சாபியா என்றழைக்கப்படும் நீலநிறத்திலான உடை அணிந்திருந்தார். அதன் மதிப்பு 1,095 பவுண்ட் ஆகும்.
இந்த சுற்றுப்பயணத்தின் போது மெர்க்கல் கழுத்தில் அணிந்திருந்த நெக்லசின் மதிப்பு 10,000 பவுண்ட் எனவும் காதில் அணிந்திருந்த காதனியின் மதிப்பு 5000 பவுண்ட் என்பதும் தெரியவந்துள்ளது.
இப்படி மொத்தமாக இந்த சுற்றுப்பயணத்திற்கு மட்டும் மெர்க்கலின் உடைகள் மற்றும் அணிகலன்களுக்கு 130,107.50 பவுண்ட ஆகியுள்ளது.
[ot-caption title=”” url=”http://www.utvnews.lk/wp-content/uploads/2018/11/M1.jpg”]
[ot-caption title=”” url=”http://www.utvnews.lk/wp-content/uploads/2018/11/M2.jpg”]
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]