Trending News

ஜமால் கசோகியின் கொலையுடன் சவுதி அரேபியா நேரடியாக தொடர்புகொண்டுள்ளது…

(UTV|TURKEY)-ஊடகவியலாளர் ஜமால் கசோகியின் கொலையுடன் சவுதி அரேபியா நேரடியாக தொடர்புகொண்டுள்ளது என துருக்கி ஜனாதிபதி ரெசிப் டஹிப் எர்டோகன் (Recep Tayyip Erdogan) முதன்முறையாக குற்றம் சுமத்தியுள்ளார்.

வொஷிங்டன் போஸ்ட் நாளிதழுக்கு எழுதிய கட்டுரை ஒன்றில் அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஊடகவியலாளர் கசோகியை கொலை செயவதற்கான உத்தரவு சவுதி அரேபிய அரசாங்கத்தின் உயர்மட்டத்திலிருந்து பிறப்பிக்கப்பட்டது எனத் தாம் அறிவதாகவும் துருக்கி ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

எனினும், மன்னர் சல்மான் இந்தக் கொலையுடன் தொடர்பு கொண்டிருப்பார் எனத் தாம் நம்பவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் ஜமால் கசோகி, கடந்த ஒக்டோபர் மாதம் 2ஆம் திகதி துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் உள்ள சவுதி அரேபிய துணைத் தூதரகத்தில் வைத்து கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

Related posts

Drought may affect Ampara Maha paddy harvest

Mohamed Dilsad

நீர்நிலைகளின் வான் கதவுகள் திறப்பு

Mohamed Dilsad

Uva PC term ends today

Mohamed Dilsad

Leave a Comment