Trending News

தமிழ் தேசியக் கூட்டமைப்பு எப்போதும் எதிரானவர்கள்?

(UTV|COLOMBO)-தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பது எப்போதும் எமக்கு எதிராக இருந்த ஒரு கட்சி எனவும், அவர்களும் தற்பொழுது துண்டு துண்டாக உடைந்துள்ளதாகவும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

அனுராதபுரத்தில் இடம்பெற்ற இராணுவத்தினருக்கான ஆசீர்வாத சமய நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார். தமிழ் தேசியக் கூட்டமைப்பு புதிய அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்குமா? என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் நாட்டுப் பற்றுள்ளவர்கள் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்குவார்கள் என தான் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தமக்கு பெரும்பான்மை இருப்பதாகவும், பாராளுமன்றம் கூடியவுடன் அதனை காண்பிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

නාම යෝජනාව ප්‍රතික්ෂේප වූ අශේන් සේනාරත්න, මැතිවරණ කොමිෂමට එරෙහිව උසාවි යයි

Editor O

One-day service resumes – Registration of Persons Dept.

Mohamed Dilsad

எயிட்ஸ் நோயாளர்களைக் குறைப்பதற்கு விசேட வேலைத்திட்டம்

Mohamed Dilsad

Leave a Comment