Trending News

பிரதமர் மஹிந்தவின் நியமனம் அரசியலைமைப்பிற்கு முரணானது இல்லை

(UTV|COLOMBO)-பிரதமராக மஹிந்த ராஜபக்ஸ நியமிக்கப்பட்டமை அரசியலமைப்புக்கு முரணான நடவடிக்கை அல்ல என ஐக்கிய இராச்சியத்தின் பாராளுமன்ற உறுப்பினர் லோட் நேஸ்பி (Lord Naseby) தெரிவித்துள்ளார்.

இலங்கையின் தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், சர்வதேச சமூகம் தொடர்ந்தும் ரணில் விக்ரமசிங்கவையே பிரதமராக ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் பாராளுமன்றத்தில் இடம்பெறும் வாக்கெடுப்பின் பின்னரே மாற்றம் குறித்து ஆலோசிக்க முடியும் எனவும் பிரித்தானியாவின் முன்னாள் வௌிவிவகார செயலாளரும் கன்சர்வேட்டிவ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான ஹியுகோ ஸ்வயர் (Hugo Swire) தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்த விடயம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்குமாறும் அவர் தற்போதைய வௌிவிவகார செயலாளர் ஜெரமி ஹன்ட்டிடம் ​அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில், இலங்கை அரசியல் நிலவரம் குறித்த ஹியூகோ ஸ்வயரின் நிலைப்பாடு தொடர்பில் கவலையடைவதாக பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் லோட் நேஸ்பி தெரிவித்துள்ளார்.

 

 

 

 

Related posts

ஜனாதிபதியின் அதிரடி செய்தி

Mohamed Dilsad

தொழிற்சாலையொன்றில் தீப்பரவல்…

Mohamed Dilsad

DECISION ON VEN. GALAGODA ATTE GNANASARA AFTER APPEAL

Mohamed Dilsad

Leave a Comment