Trending News

ஊடகத்துறை அமைச்சு ஜனாதிபதியின் கட்டுப்பாட்டில்

(UTV|COLOMBO)-ஊடகத்துறை அமைச்சு மற்றும் அதன் கீழ் காணப்படும் நிறுவனங்கள் உள்ளிட்ட விடயதான விவகாரங்கள் அனைத்தும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கட்டுப்பாட்டில் உள்ளதாக, அமைச்சரவையின் இணைப் பேச்சாளர் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தற்போது அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இடம்பெற்று வரும் அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் சந்திப்பில் தெரிவித்தார்.

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தின் கீழ், ஜனாதிபதியின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரக் கூடிய அமைச்சுகளின் எண்ணிக்கை வரையறுக்கப்பட்டுள்ள போதிலும், அவரது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரக் கூடிய நிறுவனங்களின் எண்ணிக்கை குறைவடையவில்லை எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

 

 

 

 

Related posts

இன்று (10) நள்ளிரவு முதல் பெட்ரோல் விலை அதிகரிப்பு

Mohamed Dilsad

சுவிஸ் தூதரக ஊழியர் சம்பவம் – அஜித் பிரசன்ன உண்ணாவிரத போராட்டத்தில்

Mohamed Dilsad

ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக கடும் வாகன நெரிசல்

Mohamed Dilsad

Leave a Comment