Trending News

சஜித் பிரேமதாசவின் அதிரடி கருத்து வெளியானது…

(UTV|COLOMBO)-எதிர்காலத்தில் தமக்கு வழங்கப்படுகின்ற எந்தப் பொறுப்பையும் ஏற்றுக் கொள்ள தயாராக இருப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித்தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

உயர் நீதிமன்றில் நேற்று இடம்பெற்ற வழக்கு விசாரணையின் பின்னர், பி.பி.சிக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

தாம் பிறந்ததில் இருந்தே ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து செயற்படுவதாக குறிப்பிட்ட அவர், கடந்த தேர்தல் காலங்களில் தம்மால் வழங்கக்கூடிய பூரண ஒத்துழைப்புகளை கட்சிக்கு வழங்கி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

கட்சியின் தலைவரை பலப்படுத்தும் வகையில் கடந்த காலங்களில் செயற்பட்டதைப் போன்று, எதிர்காலத்தில் தமக்கு எந்த பொறுப்பு கையளிக்கப்பட்டாலும் தாம் அதனைப் பொறுப்புடன் ஏற்றுக் கொண்டு நடைமுறைப்படுத்த தயாராக இருப்பதாகவும் சஜித் பிரேமதாச கூறியுள்ளார்.

அதேநேரம் ஐக்கிய தேசிய கட்சி எந்த ஒரு தேர்தலுக்கும் தயாராக இருப்பதாகவும், ஆனால் அந்த தேர்தல் சட்டப்பூர்வமாக அமைய வேண்டும் எனவும் சஜித் பிரேமதாச இந்த செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

Related posts

Bond Report to be handed over to Speaker today

Mohamed Dilsad

இன்று முதல் விசேட டெங்கு ஒழிப்புத் திட்டம்

Mohamed Dilsad

சட்டவிரோதமாக சவுதி அரேபியாவில் தங்கியிருந்த 2 ஆயிரம் பேர் தஞ்சம்

Mohamed Dilsad

Leave a Comment