Trending News

பாராளுமன்றம் இன்று கூடுகிறது

(UTV|COLOMBO)-பாராளுமன்றம் கலைக்கப்பட்டமையை இடைநிறுத்தி உயர்நீதிமன்றம் விடுத்த இடைக்கால தடையுத்தரவை அடுத்து, இன்று பாராளுமன்றம் கூட்டப்படவுள்ளது.

ஜனாதிபதியினால் கடந்த 4 ஆம் திகதி வௌியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின்படி, இன்று காலை 10 மணிக்கு பாராளுமன்றம் கூட்டப்படும் என சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்திருந்தார்.

எனவே, அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களையும் அமர்வில் கலந்துகொள்ளுமாறு சபாநாயகர் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, இன்று காலை 8.30 மணிக்கு கட்சித் தலைவர்கள் கூட்டமொன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் பாராளுமன்றத்தில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது.

 

 

 

 

Related posts

Former MP Justin Galappaththi passes away

Mohamed Dilsad

அமித் வீரசிங்க உணவு தவிர்ப்பு போராட்டத்தில்…

Mohamed Dilsad

இரத்தினபுரியில் அதிக மழை

Mohamed Dilsad

Leave a Comment