Trending News

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை உரிய முறையில் இடம்பெறும்

(UTV|COLOMBO)-கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை உரிய முறையில் இடம்பெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பி.சனத் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் டிசெம்பர் மாதம் 3ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை பரீட்சைகள் இடம்பெறவுள்ளன. மாகாண மற்றும் வலய பணிப்பாளர்களுடன் இதுதொடர்பில் இன்று பரீட்சைகள் திணைக்களத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

அதன்படி சாதாரண தரப் பரீட்சைகளுக்கான சகல நடவடிக்கைகளும் ஒழுங்குபடுத்தப்பட்டிருப்பதாக ஆணையாளர் நாயகம்குறிப்பிட்டார்.

அத்துடன் எதிர்வரும் 15ஆம் பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகளுடன் இதுதொடர்பில் விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

பரீட்சைக்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை முறையாக வழங்குவது தொடர்பில் அதன்போது விசேட கவனம் செலுத்தப்படவுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.

அரச தகவல் திணைக்களம்

 

 

 

 

Related posts

ரதுபஸ்வல சம்பவம் – பிரிகேடியர் மீண்டும் விளக்கமறியலில்

Mohamed Dilsad

ஆப்கானிஸ்தானில் இரட்டை குண்டுவெடிப்பு-20 பேர் பலி

Mohamed Dilsad

பாராளுமன்ற அமர்வு ஆரம்பம்

Mohamed Dilsad

Leave a Comment