(UTV|INDIA)-ஆசியான்-இந்தியா உச்சிமாநாடு, கிழக்காசிய மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இரண்டு நாள் அரசுமுறை பயணமாக பிரதமர் நரேந்திர மோடி சிங்கப்பூர் சென்றடைந்தார். சிங்கப்பூர் விமான நிலையத்தில் இருந்து ஓட்டலுக்கு சென்ற மோடிக்கு சிங்கப்பூர் வாழ் இந்தியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
13-வது கிழக்காசிய மாநாட்டில் கலந்து கொள்ளும் பிரதமர் மோடி, அந்த மாநாட்டில் பங்கேற்கும் முக்கிய தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவிருக்கிறார்.
பிராந்திய பொருளாதார கூட்டு ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்கும் மோடி, சிங்கப்பூர் நிதி நிறுவனமான ஃபின்டெக் விழாவில் கலந்து கொண்டு சிறப்பு உரையாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பயணத்தின் போது பிரதமர் மோடி – அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.