Trending News

ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் புதிய தலைவராக ஜி.எஸ்.விதானகே நியமனம்

(UTV|COLOMBO)-ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் புதிய தலைவராக, போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் ஜி.எஸ். விதானகே நியமிக்கப்பட்டுள்ளார்.

அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகலவினால் நியமனம் வழங்கப்பட்டதாக அறிக்கையொன்றினூடாக நிதி மற்றும் பொருளாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் ஶ்ரீலங்கன் விமான சேவையின் புதிய தலைவராக கபில சந்திரசேன நியமிக்கப்பட்டார்.

எனினும், அவர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.

ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் தலைவர் ரஞ்சித் பெர்னாண்டோ பதவி விலகியதை அடுத்து, கபில சந்திரசேன நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

Related posts

20 ஆம் திகதியில் இருந்து வானிலையில் மாற்றம்

Mohamed Dilsad

அனுமதிப்பத்திரமின்றி வெடிபொருட்களை வைத்திருப்பவர்கள் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்கவும்-பொலிஸார்

Mohamed Dilsad

Australian Prime Minister backs anti-Russia action

Mohamed Dilsad

Leave a Comment