Trending News

நேற்றைய தினம் ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்றம் இன்று(15) கூடுகிறது

(UTV|COLOMBO)-குழப்ப நிலைமைக்கு மத்தியில் நேற்றைய தினம் ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு மீண்டும் கூடவுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும், அரசாங்கத்திற்கும் எதிராக ஜே.வி.பியினால் நேற்றைய தினம் முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை, மேலதிக வாக்குகளினால் அரசாங்கத்திற்கு தோல்வி ஏற்பட்டதாக சபாநாயகர் கரு ஜயசூரிய நாடாளுமன்றில் தெரிவித்திருந்தார்.

சபாநாயகரின் இந்த அறிவிப்புக்கு, அரசாங்கத் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, ஏற்பட்ட குழப்ப நிலைமையினால் இன்றைய தினம் முற்பகல் 10 மணிவரை நாடாளுமன்றத்தை ஒத்திவைக்க சபாநாயகர் நடவடிக்கை மேற்கொண்டார்.

ஆனால் இதனை ஏற்றுக் கொள்ள முடியாது என்று ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

 

 

 

 

Related posts

பிரதமர் தலதா மாளிகைக்கு விஜயம்

Mohamed Dilsad

WORK ON COUNTRY’S BIGGEST EPZ BEGINS TODAY

Mohamed Dilsad

சீரற்ற காலநிலை – 1024 பேர் இடம்பெயர்வு

Mohamed Dilsad

Leave a Comment