Trending News

தீபிகாவை மணந்தார் ரன்வீர் சிங்

(UTV|ITALY)-பாலிவுட் பிரபலங்களான தீபிகா படுகோனே – ரன்வீர் சிங்குக்கு இத்தாலியில் வைத்து இந்திய பாரம்பரிய முறைப்படி திருமணம் நடந்து முடிந்தது.

இந்தி நடிகை தீபிகா படுகோனேவும், நடிகர் ரன்வீர்சிங்குக்கும் பல வருடங்களாக காதலித்து வந்தனர். திருமணம் செய்து கொள்ளவும் முடிவு செய்தனர். இத்தாலியில் வைத்து திருமணம் நடக்க இருப்பதாக சமீபத்தில் சமூக வலைதளத்தில் அறிவித்திருந்தனர்.
இந்த நிலையில், திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக 2 தினங்களுக்கு முன்பே மும்பையில் இருந்து இருவரும் இத்தாலி புறப்பட்டு சென்றனர்.
அங்கு நேற்று திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. அதனைத் தொடர்ந்து லோக் கோமா பகுதியில் உள்ள வில்லா டெல் பால்பியனெல்லோவில் தீபீகா படுகோனே – ரன்வீர் சிங் திருமணம் நடந்து முடிந்தது. திருணத்தை ஒட்டி லேக் கோமா பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

திருமணத்துக்கு வந்தவர்களின் செல்போன்களின் கேமராவில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. திருமணம் நடக்கும் இடம் ஏரி ஓரத்தில் இருப்பதால் படகில் பாதுகாப்புக்கு ஆட்களை நிறுத்தி உள்ளனர். திருமணத்தில் குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள் என இருவருக்கும் நெருக்கமானவர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர்.

இந்தியா திரும்பிய பிறகு நடிகர், நடிகைகளை அழைத்து மும்பையில் பிரம்மாண்டமாக திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

திருமண பரிசுகளை அறக்கட்டளைக்கு அளிப்பதாக இருவரும் அறிவித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Related posts

Argentina lose to Venezuela despite Messi’s return

Mohamed Dilsad

சீருடை வவுச்சரின் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு-கல்வியமைச்சர்

Mohamed Dilsad

Astronaut Buzz Aldrin sues his children for misuse of finances

Mohamed Dilsad

Leave a Comment