Trending News

Update – சிறைச்சாலை பேருந்து மீது துப்பாக்கிப் பிரயோகம்:சந்தேக நபர்கள் தப்பிச் சென்ற வேன் கண்டுபிடிப்பு

(UDHAYAM, COLOMBO) – களுத்துறை சிறைச்சாலை பேருந்து மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட பின்னர் சந்தேக நபர்கள் தப்பிச் சென்றதாக சந்தேகிக்கப்படும் வேன் ஒன்று ஹொரணை – மொரகஹாஹேன பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

————————————————————————————————————–

(UDHAYAM, COLOMBO) – களுத்துறை சிறைச்சாலை பேருந்து மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளவதற்காக பயன்படுத்தப்பட்ட கெப் ரக வாகனம் அத்துருகிரிய பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவருடையது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த பெண், அந்த கெப் ரக வாகனத்தை குத்தகைக்கு வழங்கி பணம் பெற்றுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

இதற்கமைய குறித்த கெப் ரக வாகனம் சில தரப்பினரிடம் கைமாறியுள்ளதாகவும், இறுதியாக அந்த கெப் ரக வாகனத்தைப் பயன்படுத்தியவரை கைதுசெய்வதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்துக்குரியவர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும், அவர்கள் பாதாள உலகக் குழுவைச் சேர்ந்தவர்கள் எனவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

சிறைச்சாலை பேருந்து மீது நேற்று மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில், சமயங் என்ற அருண தமித் உதயங்க உட்பட 5 விளக்கமறியல் கைதிகளும், இரண்டு சிறைச்சாலை அதிகாரிகளும் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

முன்னாள் இலங்கை வீரர்கள் மீது குற்றச்சாட்டு

Mohamed Dilsad

எயார் ஏசியன் நேரடி விமான சேவையை ஆரம்பித்தது

Mohamed Dilsad

Former Defence Secretary, IGP admitted to hospital

Mohamed Dilsad

Leave a Comment