Trending News

இப்படியா செய்வார் ரகுல் பிரீத் சிங்?

(UTV|INDIA)-ரகுல் பிரீத் சிங் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பிசியாக நடித்து வருகிறார். எல்லாமே முன்னணி கதாநாயகர்களின் படங்கள். சூர்யாவுடன் இணைந்து என்ஜிகே, கார்த்தியுடன் தேவ், சிவகார்த்திகேயனுடன் ஒரு படம் என தமிழில் முன்னணி நடிகர்களுடனும் அவர் நடித்து வருகிறார்.
சில நடிகைகள் தெலுங்கு மற்றும் இந்தியில் பிஸியாக இருப்பார்கள், இன்னும் சிலர் தமிழ் மற்றும் தெலுங்கில் பிஸியாக இருப்பார்கள். ஆனால் தமிழ், தெலுங்கு, இந்தி என ஒரே நேரத்தில் மூன்றிலும் பிசியாக நடிக்கும் நடிகைகளை விரல்விட்டு எண்ணிவிடலாம். அந்தப் பட்டியலில்தான் தற்போது இணைந்துள்ளார் ரகுல் பிரீத் சிங். 2014-ல் தனது முதல் இந்திப் படத்தில் நடித்த அவர் தற்போது தே தே ப்யார் தே படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்நிலையில், மீண்டும் ஓர் இந்திப்படத்தில் தான் நடிக்கவுள்ளதாகக் கூறியுள்ளார் ரகுல்.
இயக்குநர் மிலாப் சாவேரி இயக்க, சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் ரித்தேஷ் தேஷ்முக் நடிக்கும் மர்ஜவான் எனும் படத்தில் அவர் நடிக்கவுள்ளார். இப்படத்திற்காக சில மாதங்களாகவே கடுமையான உடற்பயிற்சியில் கவனம் செலுத்தி வந்த ரகுல் அதன் பலனாக உடல் எடையை கணிசமாக குறைத்து ஒல்லியான உடலுக்கு மாறி இருக்கிறார். சமீபத்தில் அவர் பகிர்ந்த படத்தை பார்த்த ரசிகர்கள் இது ரகுலா? இல்லை இலியானாவா? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Related posts

Five youth arrested over Slave Island attack remanded

Mohamed Dilsad

இலங்கைக்கு எதிரான டி20 தொடர் – முன்னணி வீரர்கள் ஓய்வு

Mohamed Dilsad

Saudi Embassy advises Saudis to leave Sri Lanka

Mohamed Dilsad

Leave a Comment