(UDHAYAM, COLOMBO) – இலங்கையில் பேருந்து மற்றும் தொடரூந்து பொதுப் போக்குவரத்துகளில் 90 சதவீத பெண்கள் பாலியல் தொந்தரவுகளுக்கு உள்ளாக்கப்படுவதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தின் அறிக்கை ஒன்றில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த பெண்களுள் நான்கு சதவீதமான பெண்கள் மாத்திரமே காவல்துறை மற்றும் ஏனையோரிடம் உதவி கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுப் போக்குவரத்தில் பாலியல் தொந்தரவுகளுக்கு உள்ளாகின்றமை குறித்து முறையிடும் அவசர தொடர்பு இலக்கம் குறித்து 74 சதவீத பெண்கள் அறிந்திருக்கவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பெண்களுக்கு எதிரான பாலியல் தொந்தரவுகள் குறித்து 119 என்ற உடனடி தொடர்பு இலக்கத்துக்கு முறையிடுமாறு காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.