Trending News

இன்று(19) பாராளுமன்ற அமர்வை பார்வையிடுவதற்கு மக்களுக்கு அனுமதி இல்லை…

(UTV|COLOMBO)-பாராளுமன்றில் இன்று (19) இடம்பெற உள்ள அமர்வை பார்வையிடுவதற்கு பொது மக்களுக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என பாராளுமன்ற அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இன்றைய அமர்வில் செய்தி சேகரிப்பதற்கான அனுமதி ஊடகங்களுக்கு வழங்கப்படும் எனவும் பாராளுமன்ற அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போதுள்ள சிக்கலான சூழ்நிலைக்கு மத்தியில் இன்று நான்காவது முறையாகவும் பாராளுமன்றம் பகல் 1 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூட்டப்படுகிறது.

இதேவேளை, கட்சித் தலைவர்களுக்கான கூட்டம் இன்று மதியம் 12 மணிக்கு பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற உள்ளது.

இந்த கூட்டத்திற்கு அனைத்து அரசியல் கட்சிகளினதும் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

 

 

 

Related posts

විදුලිය සහ ඛනිජ තෙල් අත්‍යවශ්‍ය සේවා කරමින් ගැසට් නිවේදනයක්

Editor O

අලුතින් ආනයනය කරන වාහන මිල ගැන ඉඟියක්

Editor O

அவர் ஒரு சூப்பர் பெண்மணி சேவாக் புகழாராம்

Mohamed Dilsad

Leave a Comment