Trending News

சாதாரண தர பரீட்சை மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

(UTV|COLOMBO)-கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைக்கான அனுமதி பத்திரங்களில் சிக்கல் ஏதும் காணப்பட்டால் அது தொடர்பில் உடனடியாக அறிவிக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் கோரியுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமையுடன் அனைத்து சாதாரண தர பரீட்சை விண்ணப்பதாரிகளுக்கான அனுமதி பத்திரங்கள் அஞ்சல் சேவை ஊடாக அனுப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

பரீட்சைக்கு 6 லட்சத்து 56 ஆயிரத்து 641 பேர் விண்ணப்பித்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் டிசம்பர் மாதம் 3 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

Dan Priyasad arrested

Mohamed Dilsad

Diesel joins Winslet in the ‘Avatar’ sequels

Mohamed Dilsad

President in Tirumala on a 2-day visit

Mohamed Dilsad

Leave a Comment