Trending News

நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு – மூன்று சந்தேக நபர்களுக்கு பிணை

(UTV|COLOMBO)-யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் மீது இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டின் போது அவரது மெய்பாதுகாவலர் கொல்லப்பட்ட வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 3 பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கரினால் குறித்த சந்தேக நபர்கள் 3 பேருக்கும் கடும் நிபந்தனைகளுடனான பிணை நேற்று (19) வழங்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் 3 பேரும் 2017 ஆம் ஆண்டு ஜூலை 24 ஆம் திகதி தொடக்கம், யாழ். நீதிவான் நீதிமன்றத்தில் தொடர்ச்சியாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

சந்தேகநபர்கள் 3 பேரும் தலா 2 இலட்சம் ரூபாய் ரொக்க பிணையிலும், 5 இலட்சம் ரூபாய் இரண்டு சரீரப் பிணைகளிலும் விடுவிப்பதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதேவேளை, 3 பேரும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் யாழ். நீதிவான் நீதிமன்ற அலுவலகத்தில் கையொப்பமிட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளதுடன், அவர்கள் 3 பேரும் வெளிநாட்டுக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

 

Related posts

2019 உலகக் கிண்ண இறுதிப் போட்டி – கிரிக்கெட் வரலாற்றில் ஓர் திருப்பம்

Mohamed Dilsad

நாட்டரிசி மற்றும் சம்பா அரிசிக்கு உச்ச கட்ட விலை…

Mohamed Dilsad

Ian Paisley suspended from DUP over failure to declare holidays paid for by Sri Lankan Government

Mohamed Dilsad

Leave a Comment