Trending News

பெரும்பாலான பிரதேசங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை

(UTV|COLOMBO)-தெற்கு வங்காள விரிகுடாவின் மத்திய பகுதியில் விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம் அடுத்த 24 மணித்தியாலங்களில் ஒரு தாழமுக்கமாக பலமடைந்து மேற்கு நோக்கி நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இத் தொகுதியின் தாக்கம் காரணமாக நாடு முழுவதும் மழையுடன் கூடிய வானிலை நிலைமை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

வடக்கு மாகாணத்தில் சில இடங்களில் 100-150 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. சில இடங்களில், குறிப்பாக மேல், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இன்றும் வட மாகாணத்தில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

இன்று 10 மணிநேர நீர் விநியோகத்தடை

Mohamed Dilsad

විජයදාස රාජපක්ෂ ජනාධිපතිවරණයට ඇප තියයි.

Editor O

ජුනි 29 වනදා පාසල් ආරම්භය

Mohamed Dilsad

Leave a Comment