Trending News

ஆபாசக்காட்சிகளை பார்வையிட்டமை குறித்து விசாரணை

(UTV|COLOMBO)-மேல் மாகாணசபையின் வரவுசெலவுத் திட்டம் சபையில் சமர்பிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில், சில உறுப்பினர்கள் சபையில் இருந்த கணணியில் ஆபாசக் காட்சிகளை பார்வையிட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மாகாணத்தின் பிரதம செயலாளர் பிரதீப் யசரத்ன தெரிவித்துள்ளார்.

மேல் மாகாண முதலமைச்சர் இசுரு தேவப்பிரியவின் பணிப்புரையின் கீழ் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாகாணசபைக்குள் இவ்வாறான சம்பவம் இடம்பெற்றுள்ளமையை உறுதிப்படுத்தும் வகையில் சபைக்கு இணையத்தள வசதிகளை வழங்கும் அமைப்பிடம் அறிக்கையொன்றை கோரியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

குறித்த அறிக்கை கிடைத்தவுடன் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மேல் மாகாண பிரதம செயலாளர் பிரதீப் யசரத்ன தெரிவித்துள்ளார்.

நவீன கட்டமைப்புக்களுடன் கூடிய இந்தக் கட்டடத்திலுள்ள மண்டபத்தில், அனைத்து உறுப்பினர்களும் இணையத்தள வசதிகளுடன் நவீன கணினிகள் வழங்கப்பட்டுள்ளன.

தலா 6,40,000 ரூபா பெறுமதியான 150 கதிரைகளை இந்த கட்டடத்திற்காகவே கொள்வனவு செய்ய முயற்சித்தனர்.

ஆறரை பில்லியன் ரூபாவிற்கும் அதிக பணம் செலவிட்டு, பத்தரமுல்ல – டென்சில் – கொப்பாகடுவ மாவத்தையில் நிர்மாணிக்கப்பட்ட மேல் மாகாணசபையின் புதிய கட்டடத்தில் முதலாவது சபைக்கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது.

அடுத்த வருடத்திற்கான வரவுசெலவுத் திட்டத்தை சமர்பிப்பதே மாகாணசபை அமர்வின் முக்கிய நோக்கமாகும்.

முதலமைச்சர் வரவசெலவுத் திட்டத்தை சமர்ப்பித்த சந்தர்ப்பத்தில், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் மூவர் ஆபாசக் காட்சிகளை பார்வையிட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

குணசிறி ஜயனாத், சுமித் சொய்சா மற்றும் கீர்த்தி காரியவசம் ஆகிய ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் மூவரே இவ்வாறு ஆபாச காட்சிகளை பார்வையிட்டுள்ளனர்.

 

 

 

 

 

Related posts

வெளிவந்த செய்தி உண்மை இல்லை

Mohamed Dilsad

Brexit: May expected to meet Corbyn to tackle deadlock

Mohamed Dilsad

Lebanon refugee camps hit by 5 suicide bombers

Mohamed Dilsad

Leave a Comment