Trending News

‘பிரதம நீதியரசருக்கு தான் கடிதம் அனுப்பவில்லை-சபாநாயகர்

(UTV|COLOMBO)-சபாநாயகர் கரு ஜயசூரியவால் பிரதம நீதியரசருக்கு நேற்றைய தினம் அனுப்பப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ள கடிதம் பொய்யான ஒன்றென சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

புதிய பிரதமர் மற்றும் அரசாங்கத்தை அமைப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுக்காமைக் காரணமாக, நாட்டில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அரசமைப்பின் 37.2 சரத்துக்கமைய பிரதம நீதியரசரின் அனுமதியுடன் ஜனாதிபதிக்கு இருக்கும் அதிகாரங்கள், முப்படைகளினதும் கட்டளைத் தளபதி பொறுப்பு தனக்கு கிடைக்க வேண்டுமெனத் தெரிவித்து பிரதம நீதியரசர் சுனில் பெரேராவுக்கு சபாநாயகரால் அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படும் கடிதம் ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ள நிலையில், சபாநாயகர் அலுவலகம் இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.

அறிக்கையொன்றை வெளியிட்டே சபாநாயகர் அலுவலகம் இந்த விடயம் தொடர்பில் மறுப்பைத் தெரிவித்துள்ளது.

 

 

 

Related posts

GOVERNMENT AYURVEDIC DOCTORS PROTEST

Mohamed Dilsad

විපක්ෂ නායක අසුනට, පාර්ලිමේන්තුවේ කෝඩුකාරයෙක් කරපු වැඩේ.

Editor O

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு முன்னால் ஆர்ப்பாட்டம்

Mohamed Dilsad

Leave a Comment