Trending News

தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகளுக்கு இரட்டை பிரஜாவுரிமை – முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி

(UDHAYAM, COLOMBO) – தமிழ்நாட்டில் உள்ள இலங்கை தமிழ் அகதிகளுக்கு இரட்டை பிரஜாவுரிமை வழங்கப்படவேண்டும் என்று தமிழகத்தின் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இந்திய பிரதமர் மோடியிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

டெல்லியில் இந்தியப் பிரமதமர் நரேந்திர மோடியை நேற்று முன்தினம் சந்தித்தார்.

இந்த சந்திப்பின்போது தமிழக பிரச்சினைகள் தொடர்பாக 23 பிரச்சினைகள் குறித்த மகஜர் ஒன்றையும் எடப்பாடி இந்தியப் பிரதமரிடம் கையளித்தார்.

இதில் தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகளுக்கு இரட்டை பிஜாவுரிமை வழங்கப்படவேண்டும் என்பதும் ஒன்றாகும். இலங்கை தமிழர்கள் குறித்தும் அவர் அதில் சுட்டிக்காட்டியதாக தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பிற்கு பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தமிழக முதலமைச்சர் உரையாற்றுகையில் இந்த விடயங்களை குறிப்பிட்டதாக இந்திய ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

13வது திருத்தச்சட்டம் தொடர்பான விடயங்களையும் இந்தியப் பிரதமருடன் இவர் கலந்துரையாடியுள்ளார்.

இவற்றை கேட்டறிந்த பிரதமர் மோடி இவை தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்வதாக உறுதிதெரிவித்ததாகவும் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

Related posts

இரண்டாவது அமைச்சரவைக் கூட்டம் இன்று

Mohamed Dilsad

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யக் கூடும்

Mohamed Dilsad

Person killed lighting fireworks at musical show in Maskeliya

Mohamed Dilsad

Leave a Comment