Trending News

மனித உரிமைகளுக்கு எதிராக பிரச்சாரங்களில் ஈடுபட்டு வரும் சில உலக அரசியல் தலைவர்கள் அச்சுறுத்தி வருகின்றனர் – ஆணையாளர் இளவரசர் அல் ஹூசைன்

(UDHAYAM, COLOMBO) – ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 34வது கூட்டத் தொடர் நேற்று திங்கட்கிழமை ஜெனீவாவில் ஆரம்பமாகியது.

பூகோள மனித உரிமைகளுக்கு எதிராக பிரசாரங்களில் ஈடுபட்டுவரும் சில அரசியல் தலைவர்கள், சர்வதேச அல்லது பிராந்திய ஒப்பந்தங்களிலிருந்து விலகுவதாகவும், அவ்வாறான அமைப்புக்களிலிருந்து விலகப் போவதாகவும் அச்சுறுத்தி வருகின்றனர் என்று ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் இளவரசர் செய்யத் அல் ஹூசைன் சுட்டிக்காட்டினார்.

கடந்த ஏழு தசாப்தங்களில் உலக நாடுகள் மனித உரிமை விடயத்தில் அடைந்திருக்கும் முன்னேற்றத்தை அவர்கள் மீட்டுப் பார்க்க வேண்டும். இவ்வாறான அச்சுறுத்தல்களில் அவர்கள் வெற்றிபெற்றால் உலக மனித உரிமையில் எதனை இழக்கப் போகிறோம் என்பதையும் பார்க்கவேண்டும் எனவும் ஐ.நா ஆணையாளர் தனது உரையில் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் சபை ஸ்தாபிக்கப்பட்ட பின்னர் மனித உரிமைகள் தொடர்பான பல்தரப்பு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அது மாத்திரமன்றி உலகளாவிய காலமுறையில் மீளாய்வு மேற்கொள்ளப்படுகிறது. ஐக்கிநாடுகள் மனித உரிமை பேரவையின் அலுவலகம் பிராந்திய மற்றும் சர்வதேச அமைப்புக்கள், சகல மட்டத்திலுமான சிவில் அமைப்புக்கள் ஆகியவற்றுடன் இணைந்து இணங்கப்பட்ட விடயங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றனவா என்பதைக் கண்காணித்து வருகிறது.

முன்னெப்போதும் இல்லாத வகையில் கடந்த ஜனவரி மாதம் 21ஆம் திகதி உலகின் பல்வேறு பகுதிகளில் பேரணிகள் நடைபெற்றன.

அது ஒரு நபருக்கு எதிராகவோ அல்லது அவருடைய அரசுக்கு எதிராகவோ நடத்தப்பட்டதென்றே கருதுகின்றேன். பெண்களின் உரிமைகளுக்காக இந்தப் பேரணிகள் நடத்தப்பட்டன. இதில் ஐக்கிநாடுகள் மனித உரிமை பேரவை அலுவலக பணியாளர்கள் கலந்துகொண்டமையை இட்டு மகிழ்ச்சியடைகின்றேன். நாம் சகலரது உரிமைகளுக்காகவும் ஒன்றிணைய வேண்டும்.

இதுபோன்ற அரசியல் தலைவர்கள், லீக் ஒவ் நெஷன்ஸ் காலத்திலும் இருந்ததுடன், அப்போதைய பன்நாட்டு கட்டமைப்பிலிருந்து விலகப் போவதாக எச்சரித்திருந்தார்கள்.

அப்போது ஏற்பட்ட விடயங்கள் குறித்த அனுபவங்கள் எமக்கு உண்டு. எனவே நாம் சிலை போன்று அமர்ந்திருக்க மாட்டோம். நாம் இழப்பதற்கு பல இருப்பதுடன், பாதுகாப்பதற்கும் பல விடயங்கள் இருக்கின்றன. எமது உரிமைகள் ஏனையவர்களின் உரிமைகள் என்பன இதுபோன்ற அரசியல் இலாப நோக்கமுமடையவர்களால் புறந்தள்ள முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

101 Fishermen apprehended for engaging in illegal fishing practices

Mohamed Dilsad

India, Sri Lanka to increase cooperation in curbing drugs and human trafficking

Mohamed Dilsad

இன்றைய போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற திமுத் காருணாரத்ன

Mohamed Dilsad

Leave a Comment